பௌர்ணமி தினமான நேற்று கன்னியாகுமரியில் இரவு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்து ஆறாம் தேதியன்று நிகழ்ந்த சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பின்னதாக கடலில் பல்வேறு மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் கன்னியாகுமரி கடலில் இதுபோன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் உள்வாங்குவது, அலையே இல்லாமல் குளம் போன்று காட்சியளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் பௌர்ணமியான நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இவை சுமார் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கடலில் இருந்த பாறைகளுடன் மணல் திட்டுக்களும் வெளியே தெரிந்த வண்ணம் இருந்தது.
இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகில் செல்ல பயந்த நிலையில் மீனவர்கள் மட்டும் வழக்கம் போல் கடலுக்கு சென்று மீன்களை பிடித்துவிட்டு கரைக்கு திரும்பியுள்ளனர்.