Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பள்ளிக்கல்வி ஆணையரிடம் மனு.

0

அரசின் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு
அரசு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கிய ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோரிடம்  மனு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத் தலைவர் குணசேகரன் ,
மாநில பொருளாளரும் மாவட்ட செயலாளருமான திருச்சி நீலகண்டன் தலைமையில் நிர்வாகிகள் பள்ளிக்கல்வி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்றுப்பணி வழங்கி நியமனம் செய்து முதன்மைக் கல்வி அதிகாரி அரசின் வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலும் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு மாற்றுப் பணியில் நியமனம் செய்யாத பட்சத்தில், திருச்சியில் மட்டும் நியமனம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் மாவட்ட கல்வி துறையில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும் .

எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுப் பணி நியமன ஆணைகளை உடனடியாக ரத்து செய்து, ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருவெறும்பூர் ஒன்றியத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கவில்லை.
உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு விதிகளுக்கு முரண்பாடாக செயல்படும் கல்வித் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கலியபெருமாள், சங்கர், அமல் ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.