முருங்கைகாயை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரிப்பு மையம் தொடக்கம்.
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை மற்றும் செப்பர்டு இணைந்து மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான்
2.0 திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழு பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக முருங்கை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு அலகு (மையம்) தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், நாகமங்கலம் செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் செயின்ட் ஜோசப் கல்லூரியின் அதிபர் முனைவர் லியோனார்டு,
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ்
நாகமங்கலத்தின் ஊராட்சி தலைவர் வெள்ளைச்சாமி,
பி.பி.ஆர்கானிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் பாலதண்டயுதபாணி,
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன், இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன்,
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் உட்பட மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள் மற்றும்
கல்லூரியின் மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது இந்நிலையில் முருங்கை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பேக்கிங் செய்முறைகளை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் செய்து காட்டினர்.