Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சமயபுரத்தில் மீண்டும் தங்கரதம்.எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, மகேஸ்வரி வையாபுரி.

0

ஓடாத தங்கரதம்.
ஓடவைத்த தமிழக அரசுக்கு நன்றி.
எங்களின் 3 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் கிராமத்தில், மக்களுக்கு அருள்பாலிக்கும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பல ஆண்டுகளாக தங்க ரதத்தில் மாரியம்மன் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்த நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வந்தது.

தங்க ரதத்தில் அம்மன் உலா வரும் நிகழ்வை திருக்கோயில் குடமுழுக்கு காரணத்தைக் காட்டி பல ஆண்டுகளாக தங்கரதம் எங்கு இருக்கிறது என்று பக்தர்களுக்கு கேள்வியாக இருந்த நிலையில் சமயபுரம் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர் தங்கரதம் குறித்து, சமயபுரம் திருக்கோயில் அறநிலைத்துறை அலுவலகத்தில் தகவல் கேட்டதற்கு அறநிலை துறை சார்பில் முறையான தகவல் எதுவும் தெரிவிக்காத காரணத்தினால்

சில பக்தர்கள் எங்கள் அமைப்பை தொடர்பு கொண்டு திருக்கோயிலில் உள்ள தங்க ரதத்தை காணவில்லை என்றும் தங்கரதம் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்து ஓடாமல் உள்ள அம்மன் தங்க ரதத்தை மீண்டும் ஓடு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

பக்தர்களின் கோரிக்கைக்கு விடை தேடும் வகையில் எங்கள் அமைப்பின் சார்பில் கடந்த 3 ஆண்டுகள் முன் அம்மன் பவனி வரும் தங்கரதம் குறித்து இந்து சமய அறநிலைத்துறை, முதன்மைச் செயலர், ஆணையர், இணை ஆணையர், மற்றும் காவல்துறை ஆகிய துறைகளுக்கு தங்க ரதம் ஓடாமல் இருந்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பதிவு அஞ்சல் மூலம் மனு அனுப்பி இருந்தோம்.

மேலும் காணாமல் இருந்த அம்மனின் தங்கரதம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் படி பல தகவல் கேட்கப்பட்டது. அதற்கான பதிலும் கிடைக்கப்பெற்றது,

தொடர்ந்து எங்கள் இயக்கத்தின் சார்பில் அம்மனின் தங்க தேர் பவானி வரவேண்டும் என்று பல்வேறு மனுக்கள் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி இருந்தோம்.

மேலும் தங்கத்தேர் குறித்து இயக்கத்தின் சார்பில் அரசினுடைய கவனத்திற்காக சுவரொட்டிகள் பல வெளியிட்டபோது
சில நபர்கள் எனது கைப்பேசிக்கு மிரட்டல் விடுத்தார்கள். அந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

அதனடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓடாமல் இருந்த தங்கத் தேரை மீண்டும் இயக்க வேண்டும் என எங்கள் இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

எங்களுடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் அம்மனுடைய தங்கத்தேர் மீண்டும் இயக்க வேண்டும் என்று எங்கள் இயக்கத்தின் சார்பில் முதல் குரலாக ஒலித்தது. அந்த முதல் குரலுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மீண்டும் கடந்த சில தினங்களுக்கு தங்கத் தேரை மீண்டும் ஓட வைத்த தமிழக அரசுக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் பல நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் ஒரு சில நபர்கள் அம்மனின் தங்கத்தேர் பவனி வர வேண்டுமென்று நடவடிக்கை எடுத்ததாக பிரச்சாரங்கள் பல செய்துவரும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமயபுரம் மாரியம்மனுக்கு தெரியும் உண்மையாக ஓடாத அம்மனின் தங்கத்தேர் மீண்டும் எப்படி ஓடி அம்மன் தன் தங்கத்தேரில் மீண்டும் பவனி வந்து மக்களுக்கு அருள்பாலித்தார் என்று!
உண்மைக்கு என்றும் அழிவில்லை.
சுயநல கூட்டத்தின் சுயரூபம் அம்மனுக்கே வெளிச்சம்.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
(95002 99882)

Leave A Reply

Your email address will not be published.