Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு பொட்டலங்களை வழங்கினார்.

0

திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில் திருச்சியில் காவல்துறையினர் ஆங்காங்கே சாலைகளில் தடுப்பு அமைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கபசுரக் குடிநீர், சளி, இருமல் மருந்து, உணவு உள்ளிட்டவற்றை காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் ஊரடங்கு கட்டுப்பாட்டிலும் பணியாற்றும் காவலர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை அகில இந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

கபசுரக் குடிநீர், சளி, இருமல் மருந்து, உணவு உள்ளிட்டவற்றை நேற்று காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் வழங்கப்பட்டது.

திருச்சி தில்லைநகர், கே.டி. தியேட்டர்,ஜங்ஷன், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை, மாம்பழச்சாலை, ஸ்ரீரங்கம் காவல் நிலையம், நம்பர் 1 டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய காவலர்களை தேடி சென்று அவர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்த மருந்துகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சித்த மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜான் ராஜ்குமார் மற்றும் மருத்துவர்கள் சலாவுதீன்,
சகுந்தலா சந்தானம், சரவணன் சுசீலா உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.