Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

0

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தானை சேர்ந்த இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகிறார்.

வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:-

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

டி20 அணி:-

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

Leave A Reply

Your email address will not be published.