மாணவி தற்கொலை விவகாரம்:
ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலையை, அரசியலாக்கி பொய்களை பரப்பி வரும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி வக்கீல் கென்னடி ,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைத்தலைவர் நந்தலாலா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிர்வாகி சம்சுதீன்,மக்கள் கலை இலக்கியக் கழக பொதுச் செயலாளர் கோவன், கிறிஸ்தவ பாதிரியார்கள் அந்துவான், லாரன்ஸ், மைக்கேல் ஜோ, அல்போன்ஸ்,
அந்தோணி, ஞானதுரை ,
சகாயராஜ், பால்ராஜ் ,ஜெயபாலன், வில்சன் உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்,
காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ,எஸ்.டி.பி.ஐ., தமிழக விவசாயிகள் சங்கம் போன்ற பல்வேறு கட்சி அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத கலவரத்தை தூண்ட துடிக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சதிகளை முறியடிப்போம். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க.வினரை கைது செய் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.