பெரியார் உருவ சிலை அவமதிப்பு – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் .
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சமூக விரோதிகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .
தந்தை பெரியார் இந்த மன்னை விட்டு மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பெரியாரின் கொள்கையை ஏற்று கொண்ட லட்சகனக்கான தொண்டர்களின் மனதில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். தமிழக மக்களால் போற்ற படும் உன்னதமான தலைவர் பெரியார் அவர்களின் உருவ சிலை அவமதிப்பை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது.
அறிஞர் அண்ணா. திருவள்ளுவர். அம்பேத்கர் போன்றவர்களின் உருவ சிலைகளை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வரும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என காவல் துறையினரை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே கோவையில் பெரியார் உருவ சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசையும் காவல் துறையினரையும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.