திருச்சியில் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி.அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,
திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு,இ.ஆ.ப., அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன்,
செ.ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான், முதன்மைக் கல்வி அலுவலர்
ர. பாலமுரளி,
நகர் நல அலுவலர் டாக்டர் யாழினி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சுப்பிரமணியன், முன்னாள் துணை மேயர் மு. அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி
மற்றும் பகுதி செயலாளர் கண்ணன், அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ் நிர்வாகிகள் புத்தூர் தர்மராஜ் , வண்ணைமோகன் பவுல்ராஜ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.