உலக சாதனை புரிந்து திருச்சி திரும்பிய தமிழ்நாடு சிலம்ப கோர்வை வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பான வரவேற்பு.
திண்டுக்கல் ஆத்தூரில் 12 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை.
திண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதில் திருச்சியை சார்ந்த தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் அணியின் சுகித்தா, மங்கள லெட்சுமி, வர்ஷினி, கமலேஷ், ஸ்ரீஷாம், கிருஷாந்த், இஷா சார்வி, ரித்திவிகா சார்வி மற்றும் அப்ரா ஆகியோர் சிலம்ப மாஸ்டர் தர்மலிங்கம் அவர்களின் பயிற்சியில் பங்கேற்று தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர்
இன்று திருச்சி வந்தடைந்த சிலம்ப வீரர்களை தமிழ்நாடு சிலம்ப கோர்வை துணை தலைவர் வரகனேரி ரவிசந்திரன் வரவேற்று இன்னும் பல வெற்றிகளையும் புதிய உலக சாதனைகளையும் புரிய வேண்டும் என உற்சாகபடுத்தினார்.
உடன் இந்திய சிலம்பக் கோர்வை தலைவர் மோகன் மற்றும் பெற்றோர்கள் இருந்தனர்.