Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

0

திருச்சி அரசு மருத்துவமனையில்
ஒமைக்ரான் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு தயார்.

ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் வேளையில்,

தற்போது உருமாறிய கொரோனாவான “ஒமைக்ரான்” வைரஸ் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் உருவான இந்த வைரஸ் தொற்று இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று மிகவும் வீரியத்தன்மை உடையது என்றும், உலக நாடுகள் எச்ச ரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வெளி நாட்டு பயணிகள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாக அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரபரி சோதனை நடத்தப்படுகிறது.
இதில் ஏதேனும்
பயணிக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு
மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தயார் செய்யும்படி சுகாதர துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, குடிபோதை மீட்பு சிகிச்சை மைய கட்டிடம் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ளது.
தரைதளம், முதல்தளம், 2 – வது தளம் என 3 தளங்களில் 30 படுக்கைகளுடன் இந்த வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் யாருக்காவது பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால் சிகிச்சைக்காக இந்த வார்டில் அனுமதிக்கப் படுவார்கள்.

ஒமைக்ரான் தொற்றுடன் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள் அதிகரிக்கப்படும் என்று டீன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.