Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.

0

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன், திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகியோரது உருவங்களை சாக்லெட்டால் வடிவமைத்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது அவரது உருவ சிலையை 6.6 அடி உயரத்தில் சாக்லெட்டால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

அந்த சிலையில் பாரதியின் வரிகளான “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதை அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் பார்த்து ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். பாரதியாரின் சாக்லெட் சிலை அருகில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

இந்த சாக்லெட் சிலையை வடிவமைத்தது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2021 புத்தாண்டையொட்டி நூற்றாண்டு கண்ட புரட்சி கவிஞர் பாரதியாரை கவுரவிக்கும் வகையிலும், அவரை அனைத்து இளையோரிடம் கொண்டு செல்லும் நோக்கத்திலும் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதில் உதித்தது தான் இந்த சிலை. அதாவது 482 கிலோ எடையில் சாக்லெட் கொண்டு 6.6 அடி உயரத்தில் பாரதியார் சிலையை வடிவமைத்தேன். நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை வடிவமைக்க 106 மணி நேரமானது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.