திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனரா?
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் அறிக்கை.
திருச்சி மாநகர் முழுவதும் குப்பையும், மேடு பள்ளமாக தான் உள்ளது.
இதனைத்தான் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவருமான இனிகோ இருதயராஜ் சீரழிந்த நிலையில் உள்ள திருச்சியை தான் தற்போது சீர்மிகு திருச்சி என முதல்வர் முன்பு பேசியுள்ளார்.
நேற்று திருச்சி மாநகர் வந்த முதல்வர் ஸ்டாலின் செல்லும் சாலைகள் மட்டும் அவசர அவசரமாக சரிசெய்யப்பட்டது.சாலைகள் இருபுறமும் கருப்பு-வெள்ளை பெயிண்டுகள் அடிக்கப்பட்டது.
முதல்வர் செல்லும் வழியில் உள்ள குப்பைகள்,சாலையில் உள்ள மண்கள் கூட அகற்றப்பட்டு திருச்சி மாநகரம் பளபளவென உள்ளது போல் காண்பிக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப் பணியில் ஒரு சதவீதம் கூட ஈடுபடுவது இல்லை.
உதாரணமாக இன்று திருச்சியில் உள்ள முக்கிய சாலைகளில் எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.
ஒமைக்ரான், டெங்கு போன்ற வைரஸ்கள் பரவி வரும் நிலையில் திருச்சி மாநகரம் முழுவதும் குப்பைகள்
அள்ள படாமல் நோய் பரவும் அபாய நிலையிலேயே உள்ளன.
முதல்வர் வரும்போது மட்டும் சுகாதார பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்கள் மற்ற நேரங்களில் திருச்சி மாநகரை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது ஏன்?
அங்கங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக
அள்ளி சுத்தம் செய்யப்படவேண்டும்.
சாலைகள் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும் .
மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார பணியில் உடனடியாக ஈடுபட்டு மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்ன திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.