Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் கோரிக்கை.

ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் கோரிக்கை.

0

 

 

திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான திருச்சி ரயில் நிலையம் – பூங்குடி ரெயில் நிலையத்திற்கு இடையே அமைந்துள்ள 1136 எண் கொண்ட ரயில்வே மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று 2009 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதோடு அல்லாமல்

2010-ல் அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியும், அதன் பிறகு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த அதிமுக அரசு 2011ல் மேம்பாலம் கட்டும் பொருட்டு

2 கட்ட பணிகளில் புதியதாக முதல்கட்டமாக ரூ. 81.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு,

அதன் பிறகு 2014-ல் பணி துவக்கப்பட்டு 3.ஆண்டுகளில் பணி நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணி நடைபெற்றது.

இதன் கட்டுமானம்  மற்றும் விரிவாக்கத்திற்கு மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான இடங்களும், மத்திய அரசின் ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்களும் அடங்கும். குறிப்பாக ராணுவத்திற்கு சொந்தமான 0.663 ஏக்கர் நிலத்தை பெறும் பொருட்டு மாநில அரசு அலுவலர்கள் தொடர் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இதற்கு வலுசேர்க்கின்ற வகையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் 2009-லிருந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்துக்கு வெளியே மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி உள்ளிட்ட  ராணுவ அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை நேரிலும் கடிதம் மூலமாகவும் அவர்களுக்கும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இந்த பணி உட்பட தமிழ்நாட்டில் 4-சாலை பணிகளுக்கு தேவையான ராணுவ நிலங்களை வழங்க வேண்டும் என்றால் இந்த பணிக்கு ரூ.5,77,66,285/- உட்பட சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களை வழங்க வேண்டும் என்று ராணுவ எஸ்டேட் அலுவலகம், சென்னையில் இருந்து மாநில அரசுக்கு வந்த கடிதத்தின் அடிப்படையில் திருச்சியிலும் மற்ற இடங்களிலும் உள்ள இடங்களை வழங்க மாநில அரசு முன்வந்த போது பெற மறுத்ததோடு அல்லாமல்

சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட் அல்லது பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மாநில அரசு நிலங்கள் தான் வேண்டும் என்று பாதுகாப்பு துறை கடிதம் அனுப்பி இருந்தது.

16-03-2018 ஆம் தேதி அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த பொழுது.
நான் விழா மேடையில் பேசுகையில் திருச்சியின் வளர்ச்சிக்காக கட்டப்படும் பாலத்திற்கு எப்படி சென்னையில் நிலம் வழங்குவார்கள். எனவே திருச்சியிலே நிலம் தர தயாராக உள்ளோம் என்றும், மேலும் அன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணி அவர்கள் நிலம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

இதன் அடிப்படையில் நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து பால பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஆவண செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.