தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை (TELC) 300 ஆண்டுகள் பழமையானதாகும்.
திருச்சபையில் 2.50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் கீழ் ஒரு கலை அறிவியல் கல்லூரி மருத்துவமனை முதியோர் இல்லம் விடுதிகள் காப்பகங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றது
இந்நிலையில் 13-ம் பேராயர் டேனியல் ஜெயராஜ் கடந்த 5-3-2020 இல் ஓய்வு பெற்றும் தனக்குத்தானே பதவி நீட்டிப்பு செய்து கொண்டு
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதி அரசரால் மூன்று ஆண்டுகளுக்கான 2019 முதல் 2020 வரை முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு கலைத்து விட்டதாக கூறிக்கொண்டு
திருச்சபை விதிகளுக்கு எதிராக நீதிமன்ற ஆணைக்கு எதிராக பல சட்டவிரோத செயல்களை செய்து வருவதாக கூறி
டி. இ.எல்.சி நலச்சங்கத்தின் தலைவர் மெகர் அந்தோணி தலைமையில் கண்டோன்மெண்ட் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி இந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.