திருச்சி தென்னூரில் லாட்டரி விற்ற முதியவர் கைது.
இருசக்கர வாகனம், பணம், செல்போன் பறிமுதல்,
திருச்சி தென்னூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை செய்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தென்னூர் தாசில்தார் லேன் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததாக திருச்சி உய்யகொண்டான் திருமலை மெயின்ரோடு ஆதி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 66) என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து இருசக்கர வாகனம், பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.