ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில்அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில்அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
ராஜராஜசோழன் 1036வது சதய விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை
முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை வளாகத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் உருவப்படத்திற்கு
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ஒருங்கிணைந்த முக்குலத்தோர் சமுதாய கூட்டமைப்பு ,
அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் மதர்லேண்ட் மணிவேல் தலைமை தாங்கினார் .
பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமான வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் முருகையா தேவர், முக்குலத்தோர் பாசறை மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன், நிர்வாகிகள் காஜாமலை கிரி, பழனிவேல், பிரபாகரன், மிளகுபாறை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்