Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாலக்கரை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் உள்ள தங்க ருத்ராட்சம் எங்கே? நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை வையாபுரி கேள்வி.

பாலக்கரை ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் உள்ள தங்க ருத்ராட்சம் எங்கே? நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை வையாபுரி கேள்வி.

0

திருச்சி திருககோயில்கள் மீட்பு இயக்கம் மற்றும் தியாகி வஉசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்துசமய அறநிலைத்துறை கவனத்திற்கு….

தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் எங்கே❓

இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் கட்டுப்பாட்டில் திருச்சி மாநகரம் பாலக்கரை பகுதியில் அருள் பாலிக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் சுவாமிக்கு ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று

சுவாமி காவிரி கரைக்கு சென்று மீண்டும் ஆலயத்திற்கு வரும் வைபோகம் தொன்று தொட்டு நடைபெறும் விழாவாக உள்ள நிலையில்,

தைப்பூசத்தன்று விநாயகப் பெருமானுக்கு தங்கத்தாலான ருத்ராட்சம் அணிந்து சுவாமி ஆற்றுக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலயம் வந்து மூலவருக்கு அந்த ருத்ராட்சத்தை அணிவித்து அபிஷேக ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெறும்.

அப்படி தைப்பூசத்தன்று நடைபெறுகின்ற விநாயகப் பெருமானுடைய சிறப்பான விழாவின் போது தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் அணிவது தொன்று தொட்டு நடைபெறுகின்ற ஒரு ஆகம விதி ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக தைப்பூச விழாவின்போது விநாயகப் பெருமானுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் அணிவது கிடையாது, இதனால் ஆகம விதிகள் படி திருவிழா நடைபெறவில்லை.

தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் அணியாமல் தான் விநாயகப் பெருமான் திருக்கோயிலில் இருந்து காவிரி ஆற்றிற்கு சென்று மீண்டும் அழைத்து வந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் சம்பந்தப்பட்ட திருக்கோயில் அலுவலர்கள் இடத்தில் கேட்டபோது முறையான எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
விநாயகப்பெருமானுக்கு சொந்தமான தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சம் எங்கே இருக்கின்றது என்று மர்மமாக உள்ளது ❓.

இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை தனி கவனம் செலுத்தி விநாயகப்பெருமானுக்கு சொந்தமான தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சத்தை கண்டுபிடித்து வருகின்ற காலங்களிலாவது அந்த ருத்ராட்சத்தை அணிவித்து விநாயகப் பெருமானுக்கு திருவிழா ஆகம விதிப்படி நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

அதேபோல் ஆலயத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது.

அதையும் இந்து சமய அறநிலைத்துறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சிதைவடைந்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் உள்ளது.

அதில் ஒரு பகுதியாக திருக்கோயிலின் அருகில் நந்தவனம் என்ற பகுதியில் உள்ள வணிக வளாகம் மிகவும் சேதமடைந்து உள்ளது அதன் அருகில் ‘பெருந்தலைவர்’ காமராஜர் தொடக்கப்பட்ட துவக்கப்பள்ளி தற்போது மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் வார்டு 23 செங்குளம் காலனி மெயின் பகுதியில் பள்ளியும் வணிக வளாகம் அமைந்துள்ளது.

திருக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகம் மிகவும் இடிந்து பள்ளி வளாகத்தில் அல்லது ரோடு பகுதியில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உயிர்பலி ஏற்படுவதை தடுக்க இந்து சமய அறநிலைத்துறை துரித நடவடிக்கை எடுத்து பொது மக்களை காக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை உயர் அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி விநாயகப்பெருமானுக்கு சொந்தமான தங்கத்தால் செய்யப்பட்ட ருத்ராட்சயை மீட்டு , உயிர்பலி வாங்க காத்திருக்கும் செல்வவிநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்து உயிர் பலியும் தடுக்க நடவேடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தீபாவளி வாழ்த்து சொல்ல வருபவர்களிடம் நரகாசுரன் இறந்துவிட்டாரா? என நக்கலாக நக்கலாக கேட்டு விட்டு இறந்ததுக்கு அப்புறம் வாருங்கள் என நாத்திகம் பேசி வருகிறாராம். எப்படி அறநிலை துறை சார்பாக நடவடிக்கை எடுப்பார் என தெரியவில்லை.

‘இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம்,

தியாகி’ வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன்
திருச்சிராப்பள்ளி.

Leave A Reply

Your email address will not be published.