Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவாது நேர்மையாக நடைபெற வேண்டும்.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் வலியுறுத்தல்.

0

ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்க – லோக் ஜனசக்தி கட்சி கோரிக்கை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, முற்றிலும் ஜனநாயக முறைப்படி நடப்பதை தமிழக தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன்
வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநிலத் தலைவர் சத்தியசீலன் அவர்களுடன்
வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்:-

தமிழகத்தில் 9
மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியான நேற்று நிறைவடைந்துள்ளது.
9 மாவட்டங்களில் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என, தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக
தலைமை கட்சியான அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்துக்கு விரோதமாக
தேர்தல் நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி தகவல்கள் அடங்கிய
சீட்டை முறையாக வழங்கவில்லை. நேர்மையாக தேர்தல் நடைபெற நீதிமன்ற உத்தரவை பெற்றோம்.

ஆனால், நீதிமன்ற உத்தரவை தேர்தல்
ஆணையம் செயல்படுத்தவில்லை” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதே கருத்தினை பல்வேறு எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.

நமது ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மிகுந்த
நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை
தமிழக
தேர்தல் ஆணையம்
முழுமையாக செயல்படுத்த வேண்டும் .

வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்
தேர்தலாவது
முற்றிலும் ஜனநாயக முறைப்படி

நடத்தப்படுவதை தமிழக தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.”

இவ்வாறு
கூட்டறிக்கையில்
லோக்
ஜனசக்தி
கட்சியின்
தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி.மணிமாறன் வலியுறுத்தியுள்ளார்.ˆ

Leave A Reply

Your email address will not be published.