Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.

0

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.நேற்ற நடந்த இரண்டாவது ஆட்டத்தில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து-
வங்காளதேச அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் , 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியின் துவக்க வீரர்கள் லிட்டன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி பேட்ஸ்மென்கள் திணறினர். அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட்லி வீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் கிரிவ்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.