Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஊரக உள்ளாட்சி தேர்தல்.ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இன்று மறைமுக தேர்தல்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்.ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இன்று மறைமுக தேர்தல்.

0

153 மாவட்ட கவுன்சிலர்கள், 1,420 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 23 ஆயிரத்து 185 கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 760 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் கடந்த 12-ந்தேதி எண்ணப்பட்டன.

இதில் தி.மு.க. 139 மாவட்ட கவுன்சிலர்கள், 982 பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் பதவியிடங்களை கைப்பற்றியது.

பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது.

இந்தநிலையில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 74 பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3 ஆயிரத்து 2 கிராம பஞ்சாயத்து துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத்தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இப்பதவிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

இதில், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இந்த மறைமுக தேர்தலில் தலா 9 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், தலா 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள், 2,890-க்கும்மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றதுணைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.