Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில், தமிழகத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்.

ஸ்ரீரங்கத்தில், தமிழகத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்.

0

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘தமிழகத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்”

தமிழக பள்ளி கல்வித் துறை சார்பாக அக்டேபர் மாதம் 2 -ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டன.

காந்தியடிகள் பிறந்த நாளான இன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் , சமுக ஆர்வலர் மாரி என்கின்ற பத்மநாபன் தலைமையில் நடைப் பெற்ற கிராமசபை கூட்டத்தில்
,நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீரங்கம் கிழக்கு இருந்தா பள்ளி தலைமையாசிரியர்வை.சைவ ராஜூ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

 

இந்த திட்டத்தினை முன் மொழிந்து ஆரோக்கிய அவ்ரத் அமைப்பின் நிறுவனர் முனைவர். பிரியா மகேஷ்வரி , கவி சமூக நல அறக்கட்டளை இயக்குநர் ஆர்.வி.கார்த்திகேயன் , கங்காரு கருணை இல்லங்களின் நிறுவனர் சி.ஆர்.ராஜா, புது சுவாசம் அறக்கட்டளை செயலாளர் உமா மகேஸ்வரி
திருவள்ளுவர் அறக்கட்டளை செயலாளர் மணவாளன், சிறுகமணி அகிலா துவக்கப்பள்ளி ஆசிரியர் சுஜாதா உள்ளிட்ட சமூக அமைப்பினர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக , இந்த திட்டத்தினை ஸ்ரீரங்கத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சமூக அமைப்பினர் வழியாக கொண்டு சென்று கல்வி பணி செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் சிவாஜி சண்முகம் மற்றும் நடராஜன்
தி மு க தொழிற்சங்கம் தமிழ்செல்வி மற்றும் மகளிர் பவர் டிரஸ்ட் மரிய ஜுலியானா, சமூக சேவகர் அழகுரோஜா ,ஜெயம் சேவ ராஜ் நிறுவனர் து. ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.

பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர் அனைவரும்
இனிப்பு வழங்கி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டன.

முன்னதாக அனைவரையும் ஆசிரியர் வீரன் வரவேற்றார்.
நிறைவாக
மணவாளன் நன்றி உரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.