Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

0

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய விபரம்.

எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை எப்போது என்றும், ஆயுதப் பூஜைக்கான சுப நேரங்கள் என்ன என்பதைப் பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

நவராத்திரியின் முக்கியத்துவமே மகிஷாசுரனை முப்பெரும் தேவியர் சேர்ந்து ஒரு உருவமாகி விரதமிருந்து அழிப்பது தான். அதோடு மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்திற்கு மறுநாளிலிருந்து தட்சணாயன காலத்தில் 9 நாட்கள் தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு பூஜிக்க மிகசிறந்த காலமாகும்.

ஒன்பதாம் நாளான நவமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் கூறுகின்றன.

இந்த போருக்காக துர்க்கை ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும். பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை :

பிலவ வருடம் புரட்டாசி மாதம் 28ம் தேதி (அக்டோபர் 14) நவமி திதியில் துர்க்கை அன்னை போருக்காக தன் ஆயுதங்களை பூஜித்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபாடு செய்ய நல்ல நேரம் :

14 அக்டோபர் 2021 (புரட்டாசி 28) வியாழக் கிழமை

காலை 6 மணி முதல் 7 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 9 மணி முதல் 12 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) – ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

பகல் 1 மணி முதல் 2 மணி வரை (குரு ஹோரை) – சரஸ்வதி பூஜை

பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) – ஆயுத பூஜை மட்டும்

பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம் :

வியாழன் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்

மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை இராகு காலம்
இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.

விஜய தசமி :

மகிஷாசுரனை கொன்று மண்ணுலக, விண்ணுலகத்தினருக்கு விடுதலை வாங்கி தந்த அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற அற்புத நாள் கொண்டாடப்படுகிறது.

இது புரட்டாசி மாதம் 29ம் தேதி தசமி திதியில் (அக்டோபர் 15) விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது.

விஜயதசமி (கொலு எடுக்க காலை 10.00 – 11.00 மணி).

Leave A Reply

Your email address will not be published.