Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

6வது மெகா தடுப்பூசி முகாம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

6வது மெகா தடுப்பூசி முகாம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

0

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று 6-கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சென்னையில் 1200 க்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார்.

அங்கு தடுப்பூசி போடப்படக்கூடிய பகுதி மற்றும் தடுப்பூசிகளை ஆய்வு செய்தார். பின்னதாக முதல்-அமைச்சரை சூழ்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த மக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.