லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.
லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.
லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன், தமிழக தலைவர் சத்தியசீலன், தமிழக தலைமை பொதுச்செயலாளர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மக்களின் தொழில் சார்ந்த கருவிகளுக்கு மரியாதை தரும் ஆயுத பூஜை திருநாளையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமி திருநாளையும் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாட்களில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்
நல்லவை அனைத்தையும் நல்கும் நவராத்திரி விழாவையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமி திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் 9 திருநாட்கள் கொலுவைத்து கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
இதில், முதல் 3 நாட்கள் வீரமிகு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக 3 நாட்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும்.
நவராத்திரி விழாவின் 9-வது நாளில் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருட்களாக பாவித்து, அவற்றுக்கு பூஜை செய்து, தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் “ஆயுத பூஜை” திருநாளாகும்.
நவராத்திரி விழாவின் 10-வது நாளில், அள்ள அள்ளக் குறையாத கல்விச் செல்வம் பெருகிட, விஜயதசமி திருநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் விஜயதசமி அன்று, மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் மூலமாகவும், பாட்டுப் பயிற்சி, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, போன்றவற்றை இந்த நாளில் தொடங்குவதன் மூலமாகவும், சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட, லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தங்களது வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளனர்.