திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு.
திருச்சி தில்லைநகர் கர்த்திக் வைத்தியசாலவில் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டம் பேரவைத்தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில்
நடை பெற்றது.
மாநிலச் செயலாளர் சாமி டேவிட் பரமானந்தம்,மாநில பொருளாளர் டாக்டர்.அபுபக்கர் சித்திக் ஆகியோர் முள்ளிலை வகித்தனர்.
பேரவை நிறுவனர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் வழக்கறிஞர் சி.பி.ரமேஷ். பேராசிரியர் முனைவர் ச.அருள். சகுநதலா சந்தானகிருஷ்ணன்,முனைவர் சையத் ஜாஹீர் ஹாசன், ஆசிரியா மு.அலெக்சாண்டர், இஆனந்தராஜ் இரா கார்த்தி ஆகியேர் கலந்து கொண்டனர்.
முடிவில் செய்தி தொடர்பாளர் த.விக்னோஸ் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் நிலவாரியம் அறிவிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2.
புலம் பெயர்ந்த தமிழர்கள் வாரிசுகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன