அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பா.ஜ.கவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பா.ஜ.கவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நடைபெற்றது.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தேசவிரோத. ஹிந்து விரோத திராவிட முன்னேற்ற கழக அரசானது ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்து சமுதாய பண்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக ஹிந்து திருக்கோயில்களை விடுமுறை நாட்களிலும். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் பூட்டி வைத்துள்ளது.

தமிழகத்தில் கேளிக்கை நிகழ்வுகள். கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், குளிரூட்டப்பட்ட பொது போக்குவரத்துக்கள் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தையும் திறப்பதற்கு அனுமதி கொடுத்து விட்டு
வஞ்சகத் தோடு ஹிந்து திருக்கோயில்களை மட்டும் பூட்டி வைத்துள்ளது.
இதனை கண்டித்து ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் மாவட்ட தலைவர் ரஜோஷ் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இராம
சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் ,கௌதம் நாகராஜன், இல. கண்ணன், பார்த்திபன் , ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியன், எஸ்.பி.சரவணன், ஸ்ரீரங்கம் ஷாலினி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.