திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.மற்றும் ஆலோசனை கூட்டம்.
திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.மற்றும் ஆலோசனை கூட்டம்.
குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில்
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு.
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் நடைபெற்றது.
பொதுவாகவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் குழுவாக செல்லும் போது, கார் மற்றும் ஆட்டோக்களில் செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே அவற்றை தடுக்கும் முயற்சியாக காவல்துறை உயர் அலுவலர்களின் உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. மூர்த்தி நடவடிக்கை எடுக்கவும், குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், ரவுடிகளுடன் பயணிக்க நேர்ந்தால் அவர்களின் செயல்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஏதேனும் தெரியவந்தால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்,
மாவட்ட காவல் கட்டுப்பாட்டறைக்கு 04312333621 , 9498181226 மற்றும
மாவட்ட தனிப்பிரிவுக்கு 04312333629, 9498100645 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.