மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்ட முதியவர்,ஆற்றில் மூழ்கி இறந்த வருவாய்த்துறை ஆய்வாளர் உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.
திருச்சி அய்யாளம்மன் படித்துறை
காவிரி ஆற்றில் மூழ்கி வருவாய்த்துறை அதிகாரி சாவு.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
கூடலூர் மாவட்டம் திட்டக்குடி மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 43) இவர் வருவாய் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார், திருச்சி வந்த இவர் குளிப்பதற்காக திருச்சி அய்யாளம்மன் படித்துறை சென்று உள்ளார்.
அங்கு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
இதில் அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார் .
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
2.
திருச்சி தனியார் மருத்துவமனையில்
தூக்குப்போட்டு முதியவர் சாவு .
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோரைக் குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் ( வயது 61) சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விரக்தியடைந்த அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் . இங்கு வந்த இடத்தில் மன உளைச்சலுக்கு ஆளான நடராஜன் மருத்துவமனையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.