இணைய வழி கணினி பயிற்சியின் நிறைவு நாளில் மரக்கன்றுகள் நட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் தொடக்க, நடுநிலை பள்ளிதலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர 5 நாட்கள் பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
இதில் இலுப்பூர் கல்விமாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற குடுமியான்மலை, உருவம்பட்டி, காட்டுப்பட்டி, மரிங்கிப்பட்டி, வேளான்பட்டி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சியின் நிறைவு நாளை அர்த்தமுள்ளதாக மாற்றவும், பயிற்சியினை எக்காலமும் நினைவுக்கூறத்தக்க வகையிலும் குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு
தேக்கு, மருதம், புங்கை, வேம்பு என 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாங்கி வந்திருந்தனர்.
அப்பொழுது பயிற்சி மையத்தை பார்வையிட வந்திருந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களிடம் கொடுத்தனர். மரக்கன்றுகளை பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
பயற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களும் அப்பள்ளி ஆசிரியர்களும் வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.பின்னர் அப்பள்ளி மாணவர்களிடம் அவற்றை பராமரித்து வளர்க்க அறிவுறுத்தினர்.
முன்னதாக பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பாக இணைய வழிக் கணினி பயிற்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கிய பள்ளித்தலைமையாசிரியை சாந்தாதேவி, மற்றும் பயிற்சியை ஆசிரியர்களுக்கு சிறப்பாக கற்றுக் கொடுத்த மைய ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் பயிற்சி மற்றும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
பள்ளித்தமிழாசிரியர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உருவம்பட்டி ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
இந்நிகழ்வு குறித்து உருவம்பட்டி ஆசிரியர் கு.முனியசாமி கூறியதாவது:
குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் இணைய வழியில் அடிப்படை கணினி பற்றிய பயிற்சிக்கு வந்திருந்தோம். பயிற்சியின் நிறைவு நாளை அரத்தமுள்ள வகையிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக எக்காலத்திலும் நினைவுக்கூறத்தக்கவகையிலும் மரக்கன்றுகளை நட எண்ணிணோம். அதன்படி பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்தோம்
.பின்னர் அங்குள்ள பள்ளி மாணவ,மாணவர்களிடம் மரக்கன்று வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் என்றார்.
பயிற்சியினை அர்த்தமுள்ளதாக மாற்றி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட ஆசிரியர்களை சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.