அரசு அலுவலர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-1 நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .
மாநில தலைவர் செய்யது அபுதாகிர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு
தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது போன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்றும்,
மத்திய அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்ற முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அலுவலர்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் முஜீப், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தனலிங்கம், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, பொது செயலாளர் தர்மராஜ், தலைமை நிலைய செயலாளர் இசக்கி, மாநில பொருளாளர் ரமேஷ், போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.