திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி
விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் மாநில துணை செயலாளர் பிரபாகரன்
சிறுத்தைகளின் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் மிளகுபாறையில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோன்று திருச்சியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாநில துணை செயலாளர் அரசு, திருச்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் கனியமுதன் மற்றும் நிர்வாகிகள் சிறுத்தை சதீஷ், பரமாவளவன், ஜெயக்குமார், முல்லைவளவன், ஜெயராஜ், குட்டி என்கின்ற அலெக்ஸ் பெஞ்சமின், பசுபதி, பீமநகர் செல்வம், ஸ்டாலின், செந்தில், விக்கி ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.