சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் இலவச மரக்கன்று வழங்கும் விழா.
சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில்
திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும்,அம்மா மக்கள் முன்னேற்ற கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டின் பேரில் சின்னம்மா சசிகலா நீடோடி வாழ வேண்டும் என வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி இனிப்பும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் R.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் முதலியார் சரித்திரம் ராமமூர்த்தி,கல்நாயக் சதீஷ்,இன்ஜினியர் ரமேஷ்,கே.கே.எம். சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.