சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் விமர்சனம் செய்வோரை வன்மையாக கண்டிக்கின்றேன்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் திருச்சியில் பேட்டி.
சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் விமர்சனம் செய்வோரை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் வைத்து மாநில துணைத்தலைவர் நெல்சன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்டு மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது:
தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமானது டாக்டர் கலைஞர் வழிகாட்டுதலின் படி செயல்படும் ஓர் இயக்கமாகும்.
ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் ,
தொகுப்பூதியம் இரத்து செய்தவர் கலைஞர் தான் .ஆசியர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் கொண்டு வந்தவரும் கலைஞர் தான்.
கலைஞர் அவர்களிடம் பல்வேறு சலுகைகளை நமக்காக பெற்றுத்தந்தவர் பாவலர் மீனாட்சி சுந்தரம் ஆவார்.
10 ஆண்டுகளாக கடந்த ஆட்சியாளர்களால் நாம் பெற்று வந்த சலுகைகள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆட்சியாளர்களால் தான் தமிழக அரசு அதிக நிதிச் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலை மாற வேண்டும் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.
கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் அவர்கள் பொது நிவாரண நிதி வழங்கிட கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் காரணமாக தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 2 கோடி வழங்க தீர்மானித்துள்ளோம்.
ஏற்கனவே ஒரு நாள் ஊதியத்தை கொரோனா பரவல் முதல் அலையின் போது அளித்தோம்.
கடந்த கால ஆட்சியில் ஆசிரியர்கள் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகள் போடப்பட்டது.
இவை அனைத்தையும் ரத்து செய்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
எனவே ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் இழந்த சலுகைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில். விமர்சனம் வைப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
பொதுச் செயலாளர் பதவி என்பது அலங்காரப் பதவி கிடையாது.உங்களின் வேலை ஆள் நான். எனவே உங்களில் ஒருவனாக இருந்து இந்த மன்றத்தை தமிழகத்தில் தனிப்பெரும் இயக்கமாக மாற்றிக்காட்டுவேன் என்றார்.
முன்னதாக டாக்டர் கலைஞர் ,பாவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
2020-2021 மற்றும் 2021-2022 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையை விரைவில் நிறைவு செய்ய வேண்டும்.
கொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு உதவிட தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதி 2 கோடி வழங்கிட வேண்டும்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்திக்க வேண்டும்.
மன்றத்தில் உள்ள மாநில பொறுப்பு காலிப்பணியிடங்களை உடனே நிரப்புதல் வேண்டும்.
ஆகஸ்டு 15 ஆம் தேதி பாவலர் திருவுருவப்படம் திறந்து கொரோனா கால நலத்திட்ட உதவிகளை மாவட்ட,நகர,ஒன்றிய ,சரக அளவில் வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி வரவேற்புரை ஆற்றினார்.
பொன்.முத்துராமலிங்கம்,சுந்தேரசன் ஆகியோர் டாக்டர் கலைஞர் குறித்து புகழ் உரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள , ஒன்றியப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில். மாநில கொள்கை விளக்க செயலாளர் மன்றம் மு.மோகன் நன்றி கூறினார்.