கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நலவாரியம் அமைக்க அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் டாக்டர் சுப்பையா வலியுறுத்தல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நல வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் வலியுறுத்தல்.
அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது.
முனைவர். ஜான்.ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் டாக்டர்கள் சம்பத்(கோவை) கஜபதி(காஞ்சிபுரம்) ஆறுமுகம், ராஜரீகம், சாய்ராம், பொன்செல்வி, கணேசன், தங்கமணி, பிரேமா, சகுந்தலா, சந்தானகிருஷ்ணன், சத்தியபாமா, அருண், உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர் .
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தபடி சித்த மருத்துவ நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்,
சித்தா ஆயுர்வேத ஹோமியோ மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கு 2 லட்சம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசு ஆணையிட்டால் 2 லட்சம் சித்த ஆயுர்வேதா ஹோமியோபதி மருத்துவர்கள் கரானா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க இலவச மருத்துவம் பார்க்க தயாராக உள்ளனர், அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்,
தமிழகத்தில் மருத்துவம் செய்து வரும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவர் களுக்கு தகுதி அடிப்படையில் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும், மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் டி.டி.எஸ். விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.