Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக எம்எல்ஏ வை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்

0

திமுக எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்த, அதிமுக நிர்வாகி கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம்


திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் மணச்சநல்லூர் பகுதியில் போஸ்டர் ஒட்டி நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவம் அதிமுக இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்

திருச்சி சமயபுரம் புறநகர் வடக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் , கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் என்பவரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் .

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அதிமுக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.