அய்யாக்கண்ணு நிர்வாண போராட்டம்: நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் திருச்சி மாவட்ட இந்து மகாசபா தலைவர் மனு.
திருச்சியில் அய்யாக்கண்ணு நிர்வாண போராட்டம், நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 20.07.2021 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி அளவில் திருச்சி கரூர் பை பாஸ் சாலையில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டின் அருகே போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் போராட்டம் என்ற பெயரில் அய்யாக்கண்ணு அரங்கேற்றிய நிர்வாண போராட்டம் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த போராட்டம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் மற்றும் பொது போக்குவரத்து அதிகமுள்ள பெண்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் நிர்வாணமாக ஒருவரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்து அதை தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
இவர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாகக் கூறி தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகிறார்.

இது ஒரு திட்டமிட்ட செயலாகும். இவர் மயானத்தில் அமைதியாக தூங்கும் மனித எலும்புக் கூடுகளை போராட்டத்தில் பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. அப்படி அது மனித எலும்புக்கூடுகளாக இருந்தால் யாருடையது? எப்போது தோண்டி எடுக்கப்பட்டது? பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த எலும்புக் கூடுகளை பொது இடங்களில் பயன்படுத்துவது போன்ற சமூகத்திற்கு எதிரான பணிகளை தமிழகத்தில் போராட்டத்தில் பயன்படுத்தி போராட்டத்தின் தன்மையை
திசை திருப்புகிறார்.
இவர் செய்யும் நிர்வாண போராட்டம் தமிழகத்தில் முன்னுதாரணமாக இருந்து மற்றவர்கள் இதே போன்று நிர்வாண போராட்டம் நடத்தினால் என்ன ஆகும்? இவர்கள் மீது சாதாரண வழக்கு பதிவு செய்து விட்டு விடுவதால் இவர்கள் இது போன்று போராட்டங்களை தொடர்கிறார்கள்.
இவர்களை 15 நாட்கள் ரிமாண்ட் செய்தால் இது போன்ற அனுமதி இல்லாத ஆர்ப்பாட்டம்,சாலை மறியலில் ஈடுபட மாட்டார்கள்.
ஆகவே, அய்யா அவர்கள் இவர் மீதும் இவரது சகாக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், சமுதாயத்தில் சீர்கேட்டினை விளைவிக்கும் இந்த மாதிரி விழி்ச்செடிகளை முளையிலேயேபிடுங்கி எறிய வேண்டும் என்றும்,
வருடத்திற்கு 365 நாட்களில் 300 நாட்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களின் வரி பணத்தில் பணிபுரியும் காவலர்களை இவருடைய போராட்டத்திற்கு 20 லிருந்து 50 காவலர்கள் வரை பயன்படுத்துகிறீர்கள்.
(தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இரண்டு அல்லது மூன்று வேளை உணவு வேறு இவர்களுக்கு)
இதில் எங்களுடைய வரிப்பணம் மற்றும் காவலர்களின் உழைப்பு வீணாகிப்போகிறது. இவருடைய சுயலாபத்திங்காக. சட்ட ரீதியாக சந்திக்க வேண்டிய விஷயங்களையெல்லாம் போராட்டத்தின் பேரில் சுய விளம்பரத்திற்காக விவசாயி என்ற போர்வையில் சுற்றி திரியும் அய்யாக்கண்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இவரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.
உண்மையான விவசாயிகள் யாரும் இவரை போன்று நடந்து கொள்வதில்லை
இவர்கள் போராட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல்துறையினரும்
மனிதர்கள் தான் அவர்களையும் கருத்தில் கொண்டு இதற்கு நடவடிக்கை
எடுத்திட வேணுமாய் அகில இந்திய இந்து மகா சார்பாக கேட்டுக் கொள்கிறோம், மேலும் வருங்காலங்களில் பெண்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நிலைமை என்னாகும் என தனது மனுவில் கூறியுள்ளார்.