இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந் தேதிகொழும்பில் தொடங்க உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம் திரும்பியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.
அதேபோல், இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்கப்பட்டு புதிய அட்டவணைப்படி நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 17- ஆம் தேதி முதல் போட்டித்தொடங்கலாம் என பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.