உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக
திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி தென்னூர் அண்ணாநகரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட மகளிரணிச் செயலாளரும், அதிமுக செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன், ஏர்போர்ட் விஜி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அக்தர் பெருமாள், தேன்மொழி, இந்திரா, ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் அணி சார்பில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.