திருச்சி மண்டலத்தில்
அரசு பஸ்களில் 3 நாளில் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம்.
சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது அப்போது தேர்தல் வாக்குறுதியாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார்.
அதன்படி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
அதன்படி தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது உள்ளது.
திருச்சி மண்டலத்தில் திருச்சி அரியலூர்பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கும்.
இதில் மூன்று மாவட்டங்களிலும் 335 அரசு டவுண் பஸ்களில் 5.64 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.