Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜமால் முகமது கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

0

ஜமால் முகமது கல்லூரியும், நல் உள்ளங்கள் அறக்கட்டளையும் (முன்னாள் ஜமால்
கல்லூரி மாணவர்கள்) இணைந்து உருவாக்கிய ” ஜமால் முகமது கல்லூரி கொரோனா தடுப்பு
உதவி மையத்தினை” மக்களை மீட்போம் !! காப்போம் !! என்ற குறிக்கோளோடு கல்லூரி
வளாகத்தில்

இன்று காலை 9.30 மணியளவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை
அமைச்சர் கே.என். நேரு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 100
குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பையை ஏழை மற்றும் ஆதரவற்ற
மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு
மற்றும் மாநகராட்சி ஆணையர் என்.சிவசுப்ரமணியன், பகுதி செயலாளர் காஜாமலை விஜய், கலந்து கொண்டனர்.

மேலும்,
.கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி
எம்.ஜே.ஜமால் முகமது, உதவிச்செயலர் முனைவர். கே. அப்துஸ் சமது, கௌரவ இயக்குநர்
முனைவர் கே.என்.அப்துல் காதர் நிகால், விடுதி இயக்குநர்கள், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்
கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ். இஸ்மாயில் முகைதீன்
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி மையத்தின் கீழ்வரும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்,

1.ஆதரவற்றோர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்குதல்

2 சாலையோர மற்றும் தேவையுடையோர்களுக்கு மதிய உணவு வழங்குதல்

3. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம்

4 ஆம்புலன்ஸ் உதவி எண்கள்
.
5. கொரானாவால் உயிரிழந்த நபர்களை நல்லடக்கம் செய்வதற்கான குழுவினர்களின் எண்கள்

6 முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து வழிகாட்டுதல்

7 கொரானாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் மூலம் வழிகாட்டுதல்

8. மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள்.

Leave A Reply

Your email address will not be published.