Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாலை நேர டிபன், சத்தான, சுவையான முட்டை சப்பாத்தி செய்யும் எளிய முறை.

0

​​முட்டை சப்பாத்தி

மாலை நேர டிபன் வகைகளில் ஒன்று சப்பாத்தி. சப்பாத்தி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையானப் பொருட்கள் :

சப்பாத்தி – 6

முட்டை – 5

கடலை மாவு – 10 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – 1ஃ4 கப்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முட்டை சப்பாத்தி செய்வதற்கு முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து தோசைக்கல்லில் போட்டு, சப்பாத்தியின் மேல் பக்கத்தில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை தடவி, சப்பாத்தியைச் சுற்றிலும் எண்ணெயை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். சுவையான, சத்தான முட்டை சப்பாத்தி ரெடி.

Leave A Reply

Your email address will not be published.