Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

+2 பொதுத்தேர்வு: பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

https://trichyxpress.com/
0

https://trichyxpress.com/

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

https://trichyxpress.com/

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் பிளஸ் 2 தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார்.

மாணவர்களின் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.