உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யாநாத் முதலமைச்சராக உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல், கொரோனா பாதிப்பை கையாண்ட விதம் ஆகிவற்றின் காரணமாக பா.ஜனதாவுக்கு செல்வாக்கு சற்று சரிந்துள்ளதாக வதந்திகள் உலா வந்து கொண்டிந்தன.
இந்தநிலையில் பா.ஜனதாவின் தேசிய பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உத்தர பிரதேசம் சென்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த இரண்டு நாட்களாக மதிப்பீடு செய்தனர்.
அதன்பின் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
அவருக்கு மோடி, அமித் ஷா பச்சைக் கொடி காட்டிவிட்டனர். யோகி ஆதித்தயநாத் போட்டியிடுவார் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மந்திரி சபையில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது.
அமைச்சரவை மறுசீரமைப்பு நிலுவையில் உள்ளது, மேலும் சாதி சமன்பாடுகளை மேலும் சமப்படுத்த சில புதிய அமைச்சர்கள் சேர்க்கபடலாம். சில அமைச்சர்கள் கட்சியை வலுப்படுத்தும் பணிக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது.