மேற்கு வங்காள புயல் பாதிப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காத்திருக்க வைத்தார். தாமதமாக வந்ததுடன், பிரதமரை மட்டும் தனியாக சந்தித்து விட்டு 15 நிமிடத்தில் புறப்பட்டு சென்றார்.
அடுத்த சில மணி நேரத்தில், அம்மாநில தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு திரும்ப அழைத்தது. இது, பழிவாங்கும் செயல் என்று மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளரை திரும்பப்பெறும் முடிவை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரான ஆலன் பந்தோபத்யாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், புதிய தலைமைச் செயலரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் மமதா பானர்ஜி அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சூழலைக் காரணம் காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.