Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.

0

ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி வரை கருப்பு பூஞ்சை நோயால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் 8 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள். மேலும் சிலருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

சிஎம்சி ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை அதிகபட்சமாக 10 பேர் சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.

இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்தது. இதையடுத்து அவரின் இடது கண் பாதிக்கப்பட்டது. அந்த கண்ணை டாக்டர்கள் அகற்றினர்.

இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்து விட்டார்.

அவர் கொரோனாவுக்கு இறந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் வேலூரில் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் ஆம்பூரில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.