காங்கோ குடியரசு நாட்டில் நையிராகோங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது.
இதில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியது. இதில் 3 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன.
எரிமலை குழம்பு விமான நிலையம் ஒன்றிற்கு 300 மீட்டர் தொலைவு வரை பரவி நின்றது. எரிமலை சாம்பல் பல அடி உயரத்திற்கு வானில் பரவி காட்சியளித்தது. இதனை முன்னிட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் எரிமலை குழம்புகள் பரவியது. இதனால், மக்களுக்கு உணவு சொண்டு செல்லும் முக்கிய பாதை தடைப்பட்டது.
5 லட்சம் பேர் நீர் மற்றும் மின்இணைப்பு இன்றி தவிக்கின்றனர்.
எரிமலை குழம்பில் சிக்கி விட கூடாது. தங்களது பொருட்களை கொள்ளையடித்து விட கூடாது என்பன போன்ற காரணங்களுக்காக மக்கள், அவசர கதியில் அங்குமிங்கும் தப்பியோடியுள்ளனர்.
இதில், ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.
எரிமலை வெடிப்புக்கு இதுவரை 31 பேர் பலியாகி உள்ளனர். பெரியவர்களில் 40 பேரை காணவில்லை.
170 குழந்தைகள் காணாமல் போயிருக்க கூடும் என ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பு தெரிவித்து உள்ளது.
பொதுமக்கள் தப்பியோடியதில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளனர்.
20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.