Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா 2வது அலையிலும் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க ஹஜ் கமிட்டி அறிவிப்பு

0

கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் கடும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இதை அடுத்து வரும் ஜூலை மாதம் 60,000 ஹஜ் பயணிகளை அனுமதிக்க சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டை சேர்ந்த 15,000 பேரையும் பிறநாடுகளை சேர்ந்த 45,000 பயணிகளையும் அனுமதிக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து 5,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக மத்திய ஹஜ்  கமிட்டி நம்பிக்கை தெரிவித்துளளது. எனினும் மாநில வாரியாக எவ்வளவு பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

வழக்கமாக இந்தியாவில் உள்ள 1,000 இஸ்லாமியர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் அதன்படி 2019-ம் ஆண்டு 1.75 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.

இந்த ஆண்டு 18 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ளோரை அனுமதிக்க போவது இல்லை என்றும்,

கடந்த 6 மாதங்களில் மருத்துவமனைகளில் எந்த நோய்க்காகவும் அனுமதிக்கப்படாதவர்கள் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.