Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

யாஸ் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

0

“யாஸ் புயல்” காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

“வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (26-05-2021) முதல் வருகின்ற 29-05-2021 வரை கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்

அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் (25-05-2021) வருகின்ற 29-05-2021 வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகல் பாரதீப் – சாகர் தீவுக்களுக்கு இடையே பாலசுருக்கு அருகே கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.