உலக சுகாதார மையம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை விட கொரோனா மரணங்கள் 3 மடங்கு அதிகம் இருக்கும் எனக் கூறி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 34 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக உலக நாடுகளின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவர ஆண்டறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அதில், ‘கடந்த 2020-ம் ஆண்டிலேயே கொரோனா மரணங்கள் குறைந்தபட்சம் 30 லட்சமாக இருந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் 12 லட்சம் மரணங்கள் கூடுதலாக இருக்கும்.
நேரடியாகவோ, மறை முகமாகவோ கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது.
தற்போது அதிகாரப் பூர்வமாக கூறப்பட்டுள்ள 34 லட்சத்தை விட 2, 3 மடங்கு இறப்புகள் அதிகமாக இருக்கும். அதன்படி பார்த்தால், 60-ல் இருந்து 80 லட்சம் வரை மரணங்கள் கொரோனாவால் நிகழ்ந்திருக்கலாம்.
இந்த எண்ணிக்கையானது மறைக்கப்பட்ட மரணங்கள், மருத்துவ வசதி இல்லாததால், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நிகழ்ந்த மரணங்களை உள் ளடக்கியது’.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.